தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி மலை ரயிலில் கட்டணக்குறைப்பை வலியுறுத்தி வரும் 18ஆம் தேதி போராட்டம்: விசிக அறிவிப்பு - நீலகிரி மலை ரயிலில் கட்டணக்குறைப்பை வலியுறுத்தி வரும் 18ஆம் தேதி போராட்டம்

நீலகிரி மலை ரயிலை எளியவர்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் இருக்கச் செய்யும், ரயில்வே நிர்வாகத்தின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து வரும் 18ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என நீலகிரி விசிகவினர் தெரிவித்துள்ளனர்.

The crowd on the mountain train was low
The crowd on the mountain train was low

By

Published : Oct 8, 2021, 11:06 PM IST

நீலகிரி: குன்னூர்- ஊட்டி இடையே மலை ரயிலில் பயணம் செய்ய முதல் வகுப்பிற்கு 75 ரூபாயும், இரண்டாம் வகுப்பிற்கு 10 ரூபாயும் கட்டணம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வசூல்செய்யப்பட்டது.

தற்போது குன்னூரில் இருந்து ஊட்டி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவுடன் செல்ல இரண்டாம் வகுப்பிற்கு 150 ரூபாயும் முதல் வகுப்பிற்கு 350 ரூபாய்க்கும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதிக கட்டணம் காரணமாக, உள்ளூர் மக்கள் ரயிலில் பயணம் செய்வதை அடியோடு நிறுத்தியுள்ளனர்.

நீலகிரி மலை ரயிலில் கட்டண அதிகரிப்பால் சாமானியர் பாதிப்பு

இந்த நடவடிக்கையால் குன்னுார் ரயில் நிலையத்திலிருந்து சாதாரண மக்கள் மலை ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலைமை எற்பட்டுள்ளது. குன்னூரிலிருந்து உதகைக்கு ரயில் மூலம் கூலித்தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வந்தவர்கள் தற்போது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, சாதாரண ஏழை,எளிய மக்கள் மலை ரயிலை பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் சகாதேவன் தலைமையில் குன்னுார் ரயில் நிலைய மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் சகாதேவன் பேசுகையில், 'சாமானிய குடிமக்கள் அன்றாடக்கூலி வேலை செய்து வருபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், ரயில்வே நிர்வாகத்தின் மக்கள் விரோத போக்கை கண்டித்து வரும் 18ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது' எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி - சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமாண்ட வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details