நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி வழியாக கீழ்நாடுகாணி தனியார் எஸ்டேட்டுக்கு நாள்தோறும் தனியார் வாகனம் மூலம் ஆள்களை வேலைக்கு ஏற்றிச் செல்வது வழக்கம். வழக்கமாக சென்றபொழுது கேரளாவிலிருந்து வந்த டிப்பர் லாரி இந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் வாகனத்தில் வேலைக்குச் சென்ற சுமார் 20-க்கும் மேற்பட்ட வேலையாட்கள் படுகாயமடைந்தனர்.
நீலகிரியில் வேலைக்கு ஆள்களை ஏற்றிச் சென்ற தனியார் வாகனம் விபத்து! - cuddalore accident
உதகை: கூடலூர் அடுத்த நாடுகாணி பகுதியில் வேலைக்கு ஆள்களை ஏற்றிச் சென்ற தனியார் வாகனம் மீது லாரி மோதியதில் 20-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

private-vehicle-accident-in-nilgiris
அரசு மருத்துவமனை கூடலூர்
இவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதில் ஆறு பேர் மேல்சிகிச்சைக்காக கேரளா மாநிலத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிக்க: மூணாறில் மீண்டும் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு