நீலகிரி மாவட்டம் குன்னூரில் சமூக பணியில் ஈடுபட்டுவரும் தன்னார்வ அமைப்பான கன்சர்வ் எர்த் பவுண்டேஷன் சார்பாக கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பழங்கள் மூலம் கரோனா வைரஸ் குறித்த ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக படங்களும் வரையப்பட்டிருந்தன.
பழங்கள் மூலம் கரோனா விழிப்புணர்வு அதுமட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுப்புப் பணிகளை மேற்கொண்டுவரும் மாவட்ட ஆட்சியரின் உருவப் படமும் பழங்களில் வரையப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் சமூக பணியில் ஈடுபட்டு வரும் கன்சர்வ் எர்த் பவுண்டேஷன் சார்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
இதையும் பார்க்க:'ஓடுங்க... ஓடுங்க... கொடிய நோய் கரோனா உங்களைத் துரத்தி வருது!'