நீலகிரி:தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட்.3) காலை சென்னையிலிருந்து கோயம்புத்தூர் சூலூர் விமான படை தளத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 12.25 மணிக்கு உதகையில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து தரை இறங்குகிறார். 12.35 மணிக்கு உதகையில் உள்ள ராஜ்பவன் சென்று தங்குகிறார்.
ராஜ்பவன்
உதகையில் உள்ள ராஜ் பவன், ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அப்போது ஆங்கிலேய அலுவலர்கள் சென்னையின் வெப்பம் தாங்காமல் நீலகிரியின் குளிரில் இளைப்பாற வருவார்களாம். பின்னாளில் தமிழ்நாட்டின் ஆளுநர்களுக்கு கோடைகால இல்லமாக இது மாற்றப்பட்டுள்ளது.
இன்று நீலகிரி வரும் குடியரசுத் தலைவரும் ராஜ் பவனில்தான் தங்குகிறார். அங்கிருந்து 4ஆம் தேதி காலை 9.50 மணிக்கு, புறப்பட்டு 10.20 மணிக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்கிறார்.
ராணுவ பயிற்சி கல்லூரியை பார்வையிடும் அவர், அங்கு நடைபெறும் கொடி மாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ராணுவ பயிற்சி முடித்த 527 இந்திய ராணுவ அலுவலர்கள், பல்வேறு வெளிநாடுகளை சார்ந்த 50 ராணுவ அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பட்டங்களை வழங்குகிறார்.