நீலகிரி:சென்னையில் நடந்த சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நான்கு நாள்கள் சுற்றுப்பயணமாக இன்று (ஆக. 3) உதகை வந்தார்.
கோயம்புத்தூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை சென்ற அவருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கா. ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் வரவேற்பு அளித்தனர். தற்போது அவர் ராஜ்பவனில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ராஜ் பவன்
உதகையில் உள்ள ராஜ் பவன், ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அப்போது ஆங்கிலேய அலுவலர்கள் சென்னையின் வெப்பம் தாங்காமல் நீலகிரியின் குளிரில் இளைப்பாற வருவார்களாம். பின்னாளில் தமிழ்நாட்டின் ஆளுநர்களுக்கு கோடைகால இல்லமாக இது மாற்றப்பட்டுள்ளது.