தமிழ்நாடு

tamil nadu

நீலகிரியில் தொடர் கனமழை: மின் விநியோகத்தில் தடை!

By

Published : Aug 6, 2020, 1:24 PM IST

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபெற்றுள்ளது.

மின் வினியோகத்தில் தடை
மின் வினியோகத்தில் தடை

நீலகிரி மாவட்டத்தில் சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அத்துடன் காற்றின் வேகமும் அதிகளவிலிருப்பாதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுகின்றன.

இதுவரை 100க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து சேதமாகியுள்ளன. அதனைச் சரிசெய்ய மாவட்ட மின்சாரத்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உதகை, சாண்டிநல்லா, கூடலூர், சேரம்பாடி, உப்பட்டி துணை மின் நிலையங்களுக்கு வரும் உயர் மின்னழுத்த பாதையில் பல கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரம் வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.

நீலகிரியில் தொடர் கனமழை

அதன் காரணமாக அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாள்களாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து உதகை மின்சாரத் துறை செயற்பொறியாளர் பிரேம் குமார், "மரங்கள் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் விரைவில் சரிசெய்யப்படும். அதன்பின் வழக்கம் போல் மின்சாரம் வினியோகிக்கப்படும்"எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:குன்னூரில் பலத்த காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து சேதம்!

ABOUT THE AUTHOR

...view details