உதகை: தமிழ்நாட்டில் நகர்புற மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதன் ஒரு பகுதியான நீலகிரி மாவட்டம் உதகையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளுக்குள்பட்ட அனைத்து இடங்களிலும் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இதில் உதகையில் சுவரொட்டிகள் மறைக்கப்பட்டும், மற்றும் கட்சிகளின் சுவரொட்டிகளை நகராட்சி ஊழியர்களால் அப்புறப்படுத்தப்பட்டன.
அதேபோல் உதகை அரசு தாவரவியல் பூங்காவிலுள்ள நினைவு தூண் பூங்கா ஊழியர்களால் துணியால் சாரம் அமைத்து மறைக்கப்பட்டது. இதனிடையே, நீலகிரி மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.
இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: கரடிகளைப் பிடிக்க தனிக்குழு