நீலகிரி:உதகையில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நாட்டில் ஏழை மக்கள் வயிற்று பசியில் இருக்கும் போது நிலவில் விண்வெளி ஆராய்ச்சி தேவையா?" என கேள்வி எழுப்பினார்.
மேலும், “நாட்டை ஆளும் தலைவர்களுக்கு எந்த கல்வி தகுதியும் தேயில்லை என்னும் பாேது, மருத்துவ படிப்பிற்கு மாணவர்களுக்கு நீட் தேர்வும் தேவையில்லை என்றும், அப்படியே கட்டாயப்படுத்தப்பட்டால், நாட்டை ஆளும் தலைவர்களுக்கும் தேர்வு முறையை கட்டாயப்படுத்தினால் நாட்டில் அறிவுத்திறன் மேம்படும்” என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய சீமான், "தேர்தலுக்கான நாடகம் தான் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, எண்ணெய் நிறுவனங்களை தனியார் மையத்துக்கு வழங்குவதால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விளையும் உயர்ந்து வருகிறது. மேலும் என்ணெய் நிறுவனங்களை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்” என்றார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசிய சீமான், "அது தேவையற்ற செலவினங்களை உருவாக்கும், மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே ஆட்சியை கலைத்து, பாஜக ஆட்சி அமைத்தது. அதேபோல் மற்ற மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மத்தியில் பாஜக தேர்தல் நடத்துமா. இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது செலவினங்களை ஏற்படுத்துமே தவிர எந்த பலனும் இல்லை.