நீலகிரி மாவட்ட எல்லையோர வனப்பகுதிகளில் அதிரடி காவல் துறையினரும் நக்சல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாடு - கர்நாடக எல்லையான கக்கனல்லா, கேரள மாநிலம் நிலம்பூர் வனத்தை ஒட்டிய, தமிழ்நாடு எல்லையிலுள்ள நாடுகாணி, பாட்டவயல் உள்ளிட்ட முக்கிய சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு, வாகன சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் அருகே கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில், மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கூடலூர், நாடுகாணி, கக்கனல்லா, பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.