நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் ஆ.ராசா நன்றி தெரிவிப்பதற்காக மக்களை சந்தித்தார். அப்போது கல்விக்கடன், நகைக்கடனால் பாதிக்கப்பட்ட பெண்கள் ராசாவிடம், தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கவந்தனர். அப்போது பெண் ஒருவர் ராசாவிடம் கோரிக்கை கூற சென்றபோது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.
திமுக எம்.பி. ராசாவிடம் மனு அளிக்க வந்த பெண்ணை தடுத்த காவல்துறையினர்!
நீலகிரி: குன்னூருக்கு வந்த திமுக மக்களவை உறுப்பினர் ராசாவிடம், கல்விக் கடனை ரத்து செய்யக்கோரி மனு அளிக்கச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தடுத்ததால், அப்பெண்ணுக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
rasa
முதன்முறையாக மக்களை சந்தித்த எம்.பி ராசா மக்களிடம் குறைகளைக் கேட்காமல் உதகைக்கு புறப்பட்டுச் சென்றதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். அதேநேரத்தில் அப்பெண்ணுக்கு ஆதரவாக அதிமுகவினர் அங்கு திரண்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.