தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கொடநாடு பங்களா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தாக்கக் கூடாது' - மாவட்ட நீதிமன்றம்

நீலகிரி: கொடநாடு பங்களா கொலை, கொள்ளை தொடர்பான வழக்கை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமர்வு நீதிமன்றம்
அமர்வு நீதிமன்றம்

By

Published : Sep 3, 2020, 9:58 PM IST

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு பங்களாவில் 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யபட்டார். இந்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை மூன்று மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 3) வழக்கு விசாரணைக்கு நீதிமன்ற காவலில் உள்ள சயான், வாளையாறு மனோஜ், உதயன், மனோஜ்சாமி ஆகிய நான்கு பேர் மட்டுமே ஆஜராகினர். ஜம்சீர் அலி கேரளா சிறையில் உள்ளார். மற்ற ஐந்து பேர் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனர்.

நீதிபதி முன்பு ஆஜரான சயான் தன்னை காவல்துறையினர் தாக்கியதாக புகார் தெரிவித்தார். அதை கேட்ட நீதிபதி, நீதிமன்ற காவலில் உள்ள சயான் உள்ளிட்டோரை காவல்துறையினர் தாக்க கூடாது என எச்சரித்தார். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details