நீலகிரி மாவட்ட காவல் துறையில், பெரும்பாலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்களே பணியாற்றுகின்றனர். இவர்கள் இங்கு பணிக்கு வந்தாலும் விரைவில் பணி மாற்றம் பெற்று சென்று விடுகின்றனர்.
எனவே, உள்ளூர் இளைஞர்களும் பெண்களும் காவலர் பணியில் சேர்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி குன்னூர் ஜான்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. குன்னூர் டிஎஸ்பி குமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் குறித்து விளக்கினார்.