நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருவதுடன் மேகமூட்டமும், சாரல் மழையும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்படைந்துள்ளது.
சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா லேம்ஸ் ராக் டால்பின் நோஸ் உட்பட சுற்றுலா மையங்கள் அனைத்தும் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசிக்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். மேலும் அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.