நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட, 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பையானது, ஒட்டுப்பட்டறை பகுதியில் உள்ள குப்பை குழியில் கொட்டப்படுகின்றன. இந்த 'குப்பை' கூள மேலாண்மை பூங்காவில், தன்னார்வ அமைப்பு மூலம் பிரிக்கப்படும் வீணாகும் பிளாஸ்டிக் பொருள்கள், பேலிங் இயந்திரம் மூலம் 200 கிலோ பிளாஸ்டிக் ஒரு பிரிவாக கொட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கம்ப்ரஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு குன்னூர் நகராட்சி மூலம் உழவர் சந்தை அருகேயுள்ள பூங்காவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. மேலும் வீணாகும் பிளாஸ்டிக்கை கொண்டு குன்னூர் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் தடுப்புச் சுவர் இதுவாகும்.