தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு கேஷ் பேக்!

நீலகிரி: உதகையில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடுக்க கேஷ் பேக் (cash back) பெறும் புதிய திட்டத்தை அம்மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

பிளாஸ்டிக் மறுசூழற்சி எந்திரம்

By

Published : Sep 16, 2019, 11:38 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. இதனையடுத்து தற்போது பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் விதமாக கேஸ்பேக் (cash back) வழங்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு- கேஷ் பேக்

அதற்காக உதகை நகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். இந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரத்திற்குள் பிளாஸ்டிக் பாட்டிலை செலுத்தும் போது அந்த பாட்டில் சிறு சிறு துகள்களாக மாற்றப்பட்டு அழிக்கப்படுகிறது.

முதற்கட்டமாக பேடிஎம் (paytm) வாடிக்கையாளர்கள் பாட்டிலை இயந்திரத்தினுள் போடும் போது, தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போது அவர்களது கணக்கில் கிரெடிட் பாயின்ட்ஸ் கிடைக்கும். அதனைத் தொடர்ந்து ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் வீதம் கேஸ்பேக் கிடைக்கும். அதற்கான தொழில்நுட்ப வசதிகள் அந்த இயந்திரங்களில் செய்யப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்கள் மாவட்டத்தின் முக்கிய நுழைவு வாயில்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details