தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டேரி பூங்காவில் ஒன்றரை லட்சம் நாற்றுகள் நடவு செய்யும் பணி...! - காட்டேரி பூங்கா

நீலகிரி: குன்னூர் காட்டேரி பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக ஒன்றரை லட்சம் நாற்றுக்களை நடவு செய்யும் பணிகள் தொடங்கியது.

coonoor

By

Published : Aug 6, 2019, 7:07 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னுார் காட்டேரி பூங்காவில் அரியவகை மரங்கள், தாவரங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு தளங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஆண்டுக்கான இரண்டாவது சீசன் வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் குன்னூர் பகுதியில், மிதமான காலநிலை ஏற்பட்டுள்ளது.

காட்டேரி பூங்கா

மேலும் அப்பகுதியில் சாரல் மழை பெய்துவருவதால், தற்போது குன்னூர் காட்டேரி பூங்காவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நாற்றுக்கள் நடவுப்பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா, ஃபிரான்ஸ் நாட்டின் மேரிகோல்டு, அடுக்கு வகை டேலியா, பால்சம், பெகோனியா, ரோஜா, சால்வியா டயாந்தஸ், ஆஸ்டர் ஸ்வீட்லில்லியம் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையயைச் சேர்ந்த மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலைத் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், பூங்காவில் புல்தரையை சமன்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்துவருகிறது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் சாரல் மழை காரணமாக, பூங்கா பச்சை பசேலென பசுமையாக காட்சியளிக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details