தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் கோடை சீசனுக்கான பணி துவக்கம்: சுமார் 2.8 லட்சம் நாற்றுகள் நடவு!

குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்காக சுமார் 2.84 லட்சம் மலர் நாற்றுகள் நடவுப் பணி துவங்கியது.

குன்னூரில் கோடை சீசனுக்கான பணி துவக்கம்
குன்னூரில் கோடை சீசனுக்கான பணி துவக்கம்

By

Published : Jan 19, 2023, 5:57 PM IST

குன்னூரில் கோடை சீசனுக்கான பணி துவக்கம்: சுமார் 2.8 லட்சம் நாற்றுகள் நடவு!

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் மே இறுதி வாரத்தில் பழக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கோடை சீசனுக்காக ஜனவரியில் 2.84 லட்சம் நாற்று நடவுப் பணிகள் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன.

இதில் முதல் கட்டமாக தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலா மேரி மலர் நாற்றுக்களை நடவு செய்து பணியை துவக்கி வைத்தார். இதில் சால்வியா, ஆன்ட்ரினம், பால்சம், பெகோனியா, மேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி, பிளாக்ஸ், டெல்பீனியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், காஸ்மஸ், ஸ்டேட்டிஸ், சூரியகாந்தி, ஆஸ்டர், லூபின் மற்றும் டேலியா போன்ற நாற்றுக்கள் இடம்பெற்றுள்ளன.

சிம்ஸ் பூங்காவில் முதல்முறையாக யூரோப் நாட்டினை தாயகமாக கொண்ட ரெனன்குலஸ் என்ற புதிய வகை மலர் நாற்றுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும் இந்த வருடம் 30-க்கும் மேற்பட்ட மலர் செடி வகைகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ரகங்கள் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளது.

'இந்த ஆண்டு 63-வது பழக்கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிப்பதற்காக மலர் நாற்றுக்கள் நடப்பட்டுள்ளன. இவை மே மாதத்தில் பூத்துக் குலுங்கும்' என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பாஜக ஆதரவோடுதான் ஈபிஎஸ் முதலமைச்சரானார்: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

ABOUT THE AUTHOR

...view details