நீலகிரி: அடுத்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில், பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், உள்ளிட்ட 75 வகையான மலர்களில் இருந்து எடுக்கப்பட்ட விதைகள், மூலம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மலர் செடிகளை தொட்டியிலும், பூங்காவிலும் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 ஆவது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவு தீவரம் - சிம்ஸ் பூங்கா
நீலகிரி அடுத்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 ஆவது சீசனுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 வது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவு தீவரம்
இந்த மலர் செடிகள் அனைத்திலும் செப்டம்பர் மாதத்தில் பூக்கள் பூக்க தொடங்கும். இதனை நீலகிரியில் இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கொண்டாட உதகை வரும் சுற்றுலாப் பயணிகள், இங்கு பூத்து குளுங்கும் மலர்களைக் கண்டு ரசித்து செல்ல முடியும் என்று தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டி!