நீலகிரி: குன்னூர் அடந்த வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ளதால் கரடி, காட்டெருமை, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்துவருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் அடிக்கடி பொருள்சேதங்களும், உயிர்சேதங்களும் ஏற்படுகின்றன.
அந்த வகையில் தேயிலை தோட்ட தொழிலாளி பீர்சிங் என்பவர் தோட்டப் பகுதியில் நேற்று (ஜனவரி 27) நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காட்டெருமை திடீரென அவரை தாக்கியது. இதனால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் பீர்சிங்.