தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊட்டி ரோஜா பூங்காவில் செடிகளை கவாத்து செய்யும் பணிகள் தொடக்கம்

கோடை சீசனையொட்டி ஊட்டி ரோஜா பூங்காவில் செடிகளை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. அம்ரித் தொடங்கி வைத்தார்.

ஊட்டி ரோஜா பூங்காவில் செடிகளை கவாத்து செய்யும் பணி தொடக்கம்
ஊட்டி ரோஜா பூங்காவில் செடிகளை கவாத்து செய்யும் பணி தொடக்கம்

By

Published : Feb 10, 2023, 3:26 PM IST

ஊட்டி ரோஜா பூங்காவில் செடிகளை கவாத்து செய்யும் பணிகள் தொடக்கம்

நீலகிரி:மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதம் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மே மாதம் 1ஆம் தேதி முதல் அம்மாதம் இறுதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை கோடை விழா என்ற தலைப்பில் நடத்தப்படுவது வழக்கமாகும்.

அவ்வாறு நடத்தப்படும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் 18-வது ரோஜா கண்காட்சி உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடைபெறவுள்ளது. அதற்காக பூங்காவில் உள்ள 31,500 ரக ரோஜா செடிகளில் கவாத்து மேற்கொள்ளும் பணிகளை இன்று(பிப்.10) நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. அம்ரித் தொடங்கி வைத்தார்.

தற்போது கவாத்து பணிகள் மேற்கொள்வதன் மூலம் கவாத்து செய்த ரோஜா செடிகளில், ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வரை ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும், அவ்வாறு பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.

இதையும் படிங்க:விழுப்புரம் மாவட்டத்திற்கு பிப்.24 உள்ளூர் விடுமுறை!

ABOUT THE AUTHOR

...view details