தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேரக் கட்டுப்பாட்டுடன் கடை திறக்க அனுமதி: சிகை திருத்தும் தொழிலாளர்கள் மனு - Covid 19

நீலகிரி: நேரக் கட்டுப்பாடுடன் சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சிகை திருத்தும் தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்துள்ளனர்.

சலூன் உரிமையாளர்கள்
சலூன் உரிமையாளர்கள்

By

Published : Apr 29, 2021, 8:09 AM IST

நாடு முழுவதும் தற்போது கரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் பல விதிமுறைகளை மாநில அரசு கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாத்தளங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள், சலூன்கள் உள்ளிட்டவைகள் அரசால் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் பகுதியில் கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்ட சிகை திருத்தும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது வாழ்வாதாரம் மேலும் பாதிப்படையாமல் இருக்க, தமிழ்நாடு சலூன் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக, அதன் தலைவர் செல்வம், செயலாளர் பிரபு, பொருளாளர் தேவராஜ், உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கைமனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், தங்களுக்கு நிவாரணம் வழங்கவும், நேரக் கட்டுப்பாடு முறைப்படி சலூன் கடை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details