நீலகிரியில், போதிய மழை இல்லாததால் கடந்த 5 மாதங்களாக பைக்காரா அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே கடந்த மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 100 அடி உயரம் கொண்ட பைக்காரா அணை தற்போது மளமளவென நிரம்பியது. முழுக்கொள்ளவை எட்டியதைத் தொடர்ந்து பைக்காரா அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
"இது பைக்காராவா... நயாகராவா" - அருவியைக் கண்டு மகிழும் சுற்றுலாப் பயணிகள்! - மழை
நீலகிரி: உதகை அருகே உள்ள பைக்காரா நீர் வீழ்ச்சியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நீர் பெருக்கெடுத்து கொட்டுவதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் அருகிலுள்ள பைக்காரா நீர்வீழ்ச்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். வெள்ளி உருகி கொட்டுவது போல நீர் வீழ்ச்சியில், தண்ணீர் கொட்டுவதைக் கண்டு அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், மக்கள் குடும்பத்துடன் நீர் வீழ்ச்சிக்கு வந்து புகைப்படம் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் ரசித்து செல்கின்றனர்.
இதனால் பைக்காரா நீர் வீழ்ச்சியில் இனிவரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. அதேபோல் பைக்காரா நீர் வீழ்ச்சியில் சீசன் களை கட்டத் தொடங்கியதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.