நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், சாலைகளில் உலா வருவதும் வாடிக்கையாகி வருகின்றன. குறிப்பாக, கூடலூரை அடுத்துள்ள நிலக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளது.
பட்டப்பகலில் சாலையில் உலாவந்த காட்டு யானையால் மக்கள் பீதி! - nilgiris people scared
நீலகிரி: கூடலூர் அருகே நிலக்கோட்டை பகுதியில் காட்டுயானை ஒன்று உலா வந்ததைக் கண்டு அச்சமடைந்த பொதுமக்கள், அதனை வனப்பகுதிக்குள் விரட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானை
இந்நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த யானை காலை நேரத்திலும் நிலக்கோட்டை சாலை வழியாக உலா வருவதைக் கண்ட அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. எனவே வனத்துறையினர் இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.