நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அளியூர் கிராமத்திலுள்ள தனியார் சொகுசு விடுதிகளில் சென்னையைச் சேர்ந்த 9 பேர் கடந்த மாதம் தங்கியிருந்தனர். அவர்கள், அப்பகுதியில் நடைபயணம் மேற்கொண்டபோது, அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். சென்னையைச் சேர்ந்தவர்களால் தங்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் என காவல் துறை, சுகாதாரத் துறைக்கு தகவலளித்தனர். அதன்பின், அங்கு வந்த அலுவலர்கள் அவர்களைத் திருப்பி அனுப்பினர்.
இந்தச் சூழ்நிலையில், அதே விடுதிக்கு சென்னையிலிருந்து நான்கு பேர் வந்ததையடுத்து பொதுமக்கள் அவ்விடுதியை முற்றுகையிட்டனர். பின்பு, அங்கு வந்த காவல் துறை, சுகாதாரத் துறை அலுவலர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.