தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: கிராமத்திற்குள் நுழைய தடை விதித்த மக்கள்! - outsiders banned

நீலகிரி: அணிக்கொரை கிராம மக்கள் கரோனா தொற்று பரவாமல் இருக்க வெளியாட்களை கிராமத்திற்குள் வராமல் காத்து வருகின்றனர்.

கிராமத்திற்குள் நுழைய தடை வித்த மக்கள்
கிராமத்திற்குள் நுழைய தடை வித்த மக்கள்

By

Published : Apr 4, 2020, 4:02 PM IST

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள அணிக்கொரை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது கிராமத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க புதிய கட்டுபாடுகள் விதித்துள்ளனர்.

அதன்படி வெளியூர் ஆட்கள் கிராமத்திற்குள் வராமல் இருக்க அக்கிராம இளைஞர்களை காவலுக்கு நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் கிராம மக்கள் வெளியே செல்லாமலும், அவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதுதவிர கிருமி நாசினியை நாள்தோறும் கிராமம் முழுவதும் தெளித்து வருகின்றனர்.

கிராமத்திற்குள் நுழைய தடை வித்த மக்கள்

மேலும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை, சிறிய லாரிகள் மூலம் கிராமத்திற்கு வரவழைத்து வீடு, வீடாக சென்று கொடுத்து வருகின்றனர். இளைஞர்களின் இந்த செயலை அக்கிராம மக்கள் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:அத்துமீறி மீன் விற்ற கேரள மீன் வியாபாரிகள்: அபராதமும்... எச்சரிக்கையும்...!

ABOUT THE AUTHOR

...view details