தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காய்கறி கிடைக்காமல் மக்கள் அவதி! - Nilgiris vegetables sale

நீலகிரி  : வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியத்தில் தோட்டக்கலைத் துறையால் அனுமதிக்கப்பட்ட ஆறு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் காய்கறி கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

people-are-suffering-due-to-lack-of-vegetables-in-nilgiris
people-are-suffering-due-to-lack-of-vegetables-in-nilgiris

By

Published : Jun 4, 2021, 11:34 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியம் உள்ளது. ராணுவ பகுதியான இந்தப் பகுதி கன்டோன்மென்ட் வாரிய நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அத்தியாவசிய தேவையான காய்கறிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் வாகனங்களில் சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதில், கண்டோன்மென்ட் வாரியத்தில் காய்கறிகள் விற்பனை செய்ய ஆறு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ராணுவ பகுதியான பிளாக் பிரிட்ஜ், ஸ்டாப் காலேஜ், பேராக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் காய்கறிகளை பொதுமக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால்,அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

காய்கறி கிடைக்காமல் மக்கள் அவதி
இதையடுத்து, அப்பகுதி மக்கள் காய்கறிகள் வாங்குவதற்காக அருவங்காடு, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்களை எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கன்டோன்மென்ட் வாரியத்திற்கு புகார் அளித்ததையடுத்து இதுகுறித்து விரைவில் தீர்வு காணப்பபடும் என கன்டோன்மென்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மதுபானம் கடத்தலைத் தடுக்க மாநில எல்லையில் தீவிர வாகன தணிக்கை

ABOUT THE AUTHOR

...view details