தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Watch:அசுரவேகத்தில் சறுக்கிய பைக்! அசால்ட்டாக எஸ்கேப் ஆன இளைஞர் - நீலகிரி செய்திகள்

குன்னூரில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகனத்திலிருந்து பாதசாரி ஒருவர் அசால்ட்டாக தாவி தப்பித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 28, 2022, 5:04 PM IST

நீலகிரி:குன்னூரில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர்கள், பெட்போர்டு யூனியன் வங்கி வளைவில் சென்றபோது நிலைத்தடுமாறி சாலையில் இழுத்து செல்லும் படக்காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க வரும் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணம் மேற்கொண்டு விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. எனவே, அதிவேகத்தை தவிர்ப்பதோடு தலைகவசம் கட்டாயம் அணிவிக்க வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நகரின் பிரதான சாலைகள், கிராமப்புற சாலைகள் என எங்கு நோக்கினும், வளைவுகளால் நிறைந்த குன்னூரின் முக்கிய பகுதியில் அபாயகரமான வளைவுகள் அதிகம் உள்ளன. இதனிடையே இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் உட்பட பல இளைஞர்களும் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று ஆபத்தைத் தேடிக் கொள்வதுடன், பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றனர்.

அந்த வகையில், குன்னூரில் இன்று (நவ.28) பெட்போர்டு யூனியன் வங்கி வளைவில் அதிவேகமாக சென்ற இளைஞர்கள் இருசக்கர வாகனத்துடன் நிலைத்தடுமாறி சாலையில் சறுக்கி விழுந்தனர். அத்துடன், அவ்வழியாக வந்த ஒருவர் மீதும் மோதி விபத்து ஏற்பட இருந்தபோது, எதிரே வந்த அவர் சாதூரியமாக தப்பினார். இந்நிலையில் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

pedestrian escapes

இதையும் படிங்க: தஞ்சையில் வயலில் இறங்கிய பள்ளி வேன்: 7 குழந்தைகள் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details