நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகள், பழவகை சாகுபடி உள்ளிட்டவற்றை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோத்தகிரி பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தபட்ட பேரிக்காய் சாகுபடியை தான் பெரும்பாலான விவசாயிகள் செய்து வருகின்றனர். இப்பகுதியில் சாம்பல் பேரி, நாட்டு பேரி, குண்டு பேரி, சட்டி பேரி, வால் பேரி உள்ளிட்ட 15 வகையான பேரிக்காய்கள் விளையும்.
தொடங்கியது பேரிக்காய் சீசன்; ஜாம் தயாரிக்கும் பணிகள் மும்மரம்!
நீலகிரி: பேரிக்காய் சீசன் தொடங்கியுள்ள நிலையில், அதிலிருந்து ஜாம் தயாரிக்கும் பணி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள பழவியல் நிலையத்தில் மும்மரமாக நடைபெறுகிறது.
pear-season-started-in-coonoor
வருடந்தோறும் பேரிக்காய் சீசனில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தற்போது பேரிக்காய் சீசன் தொடங்கியுள்ள நிலையில், அதிலிருந்து ஜாம் தயாரிக்கும் பணிகள் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள பழவியல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பேரிக்காய் ஜாம், பழரசங்களை அதிகளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.