தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வார்டில் நோயாளிகள் உற்சாக நடனம்! - கரோனா பாதிப்பாளர்கள் உற்சாக நடனம்

நீலகிரி: கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பாடல் பாடி உற்சாகமாக நடனமாடும் காணொலி காட்சி வைரலாகி வருகிறது.

dance
dance

By

Published : Sep 2, 2020, 9:44 AM IST

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை ஆயிரத்து 614 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 277 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 327 பேர், குன்னுார், ஊட்டி, மருத்துவமனைகளிலும், ஊட்டியில் உள்ள தனியார் மையத்திலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிகிச்சை மையத்தில் உற்சாக நடனமாடுபவர்கள்.

அதிலும், ஊட்டி குன்னூரில் 100க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பாளர்களுக்கு காலை, மாலை யோகா பயிற்சி, சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா பாதிப்பாளர்களில் சிலர் தங்களது பாதிப்புகளை மறந்து, உற்சாகமாக படுகர் சமூகத்தின் பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். பாட்டுக்கு ஏற்ப நடனமாடியது கரோனா பாதிப்பாளர்களுக்கு இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அண்மையில், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் இடம்பிடித்த 'மக்கள் கலங்குதப்பா' பாடலுக்கு, கரோனா நோயாளிகள் நடனமாடிய வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:செப்.14இல் கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது!

ABOUT THE AUTHOR

...view details