நீலகிரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனா நோயாளிகளுக்கு மருந்து, உணவு, வழங்கி சிகிச்சையளிப்பதுடன் காலை மற்றும் மாலை நேரத்தில் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நீலகிரியில் அதிகரித்து கரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்டத்தின் ஐந்து பள்ளிகளை தயார்படுத்தி கரோனா சிகிச்சை மையமாக மாவட்ட நிர்வாகம் மாற்றியுள்ளது.
இந்நிலையில், கரோனா வார்டில் உள்ள நோயாளிகள் மன அழுத்தம் குறைய படுக நடனம் ஆடி அசத்தினர். தற்சமயத்தில் இதுபோன்ற வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்படுகிறது. அண்மையில், கரோனா வார்டில் நோயாளிகள் முன்பு மருத்துவர்கள் நடனம் ஆடி உற்சாகப்படுத்தினர். ஒரு மருத்துவ பெண் நடனம் ஆடிய வீடியோ உலகளவில் ட்ரெண்டானது.