தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதகையில் குருத்தோலை ஞாயிறு பவனி - உதகை செய்திகள்

உதகையில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக பங்கேற்றனர்.

குருத்தோலை ஞாயிறு பவனி
குருத்தோலை ஞாயிறு பவனி

By

Published : Mar 28, 2021, 8:03 PM IST

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 4ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய வாரம் குருத்தோலை பவனி நடைபெறுவது வழக்கம்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு இறப்பதற்கு சில நாள்களுக்கு முன் ஜெர்சலம் நகரின் வீதிகள் வழியாக அவரை கழுதை மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது வழி நெடுகிலும் நின்ற மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி ஓசனா பாடல்கள் பாடினார்கள்.

இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் இன்று உதகையில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை பவனியில் பங்கேற்றனர். உதகை தூய இருதய ஆண்டவர் பேராலயத்தின் தந்தை தனிஸ் குருத்தோலைகளை மந்திரித்து மக்களுக்கு வழங்கினார். பின்னர் மக்கள் பவணியாக ஆலயத்திற்ககு சென்று திருப்பலி மற்றும் ஆராதணையில் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பு அதிகரிப்பு: அத்தியாவசியப் பணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details