நீலகிரி மாவட்டத்தில் வடக்கிழக்குப் பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உதகை, குன்னூர், கேத்தி, குந்தா, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தொடர்மழையினால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளும் துண்டிக்கபட்டுள்ளன. இந்நிலையில் உதகை அருகே உள்ள கொலகம்பை, பாரதிநகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையினால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.