நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிகரித்து வருகிறது. இரண்டு மாடிக்கு மேல் கட்டடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு, அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆற்றை ஆக்ரமித்து இரண்டு முதல் ஐந்து மாடிகள் வரை கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
2019ஆம் ஆண்டு இறுதியில் பெய்த கன மழையால் ஆக்கிரமிப்புகள் காரணமாக பல இடங்களில் மண் சரிவு மற்றும் வெள்ள நீர் புகுந்து குன்னூர் நகரமே கடும் பாதிப்புக்குள்ளாகியது. தன்னார்வலர்கள் இணைந்து குன்னூர் ஆற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் விதிமுறைகளை மீறி ஆறுகளை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டி வருகின்றனர்.