தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த ஊட்டி மலை காய்கறிகள்

உதகை: தொடர் மழை காரணமக விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்து பாதிப்படைந்த விவாசய நிலங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிகை விடுத்துள்ளன.

ooty
ooty

By

Published : Dec 4, 2019, 8:31 AM IST

நீலகிரி மாவட்டம் உதகை,கோத்தகிரி, குந்தா, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாமல் சாரல் மழையும் இரவு நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

குறிப்பாக குன்னூர் பகுதியில் பெய்த கனமழையினால் குன்னூர்-மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது மரங்களும் விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சாலையில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த ஊட்டி மலை காய்கறிகள்

உதகை அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் பெய்த பலத்தமழை காரணமாக கோலணி மட்டம், முட்டநாடு, காட்டேரி உள்ளிட்ட கிராமங்களில் கால்வாய்களில் மழை நீர் நிரம்பி அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட கேரட், பீட்ருட், கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் முற்றிலும் சேதமடைந்டுள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மழைவெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாய நிலங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவாசயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details