நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி என்னும் பல ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகம் மூடிய நிலையில் உள்ளது.
இந்த அலுவலகத்தில் தற்சமயம் பிச்சைக்காரர்கள் குடியிருப்பாகவும் குப்பைத்தொட்டி கூடாரமாகவும் உள்ளது. கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் மிக முக்கியமான சாலையில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
இப்பகுதி பெரும்பாலும் ஆதிவாசிகள் குடியிருக்கும் பகுதி என்பதாலும் வனத்தை ஒட்டி உள்ளதாலும் இப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இப்பகுதி உள்ளவர்களுக்கும் உதவி செய்யும் வகையில் கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறக்கப்படாமலே உள்ளன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிராம நிர்வாக அலுவலகத்தை திறந்து பொது மக்களுக்கு உதவி செய்யும் வகையில் உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.