நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி அருகே பல கிராமங்களில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் சொந்த வேலைக்காகவோ அல்லது அரசு சம்பந்தபட்ட வேலைக்கோ கோத்தகிரிக்கு தான் செல்ல வேண்டும். இதற்காக கீழ்கோத்தகிரியிலிருந்து கரிக்கையூர் செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஒழுங்கான சாலை இல்லங்க... கண்ணீர் வடிக்கும் பழங்குடியின மக்கள்! - tribles
நீலகிரி: கீழ்கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக சீரமைக்காமல் இருக்கும் சாலைகளை சீரமைக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பங்களாபடுகை, கொக்கோடு உள்ளிட்ட பழங்குடியின கிராமமக்கள் பயன்படுத்தி வரும் சாலை கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கபடாமல் உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால் சாலை தற்போது மிகவும் மோசமாகி வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடாமல் உள்ளது.
இதனால், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர்களை இந்தச் சாலையில் அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்தச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.