தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் மரம் கடத்தல்... வருவாய்த் துறையினர் வலைவீச்சு! - வருவாய்துறையினர்

நீலகிரி: பிதர்காடு பகுதியிலிருந்து விலையுயர்ந்த ராட்சத மரங்கள் கடத்தப்படுவதை வருவாய்த் துறையினர் கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மரக்கடத்தல்

By

Published : Jun 9, 2019, 1:19 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பிதர்காடு பகுதியில் அதிக விலையுள்ள ராட்சத மரங்கள் உள்ளன. இவற்றில் வனத்துறை, வருவாய்த் துறை கட்டுபாட்டில் உள்ள பிரிவு 17ஆவது நிலத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு இரவு நேரங்களில் கேரளாவிற்குக் கடத்தப்படுவதாக வருவாய்த்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் பந்தலூர் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட மரங்கள் கேரள மாநிலம் பத்தேரியில் உள்ள ஒரு தனியார் மர ஆலையில் விற்க்கபட்டதாகத் தெரியவந்தது.

மரக்கடத்தல்

அங்கிருந்து மரங்களைப் பறிமுதல் செய்து லாரிகள் மூலம் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவந்த அலுவலர்கள், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளையில் வனத்துறைக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details