நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைன் ஃபாரஸ்ட், சூட்டிங் மட்டும், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர்.
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - ரோஜா பூங்கா
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ரம்மியமான சூழலைக் கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
இந்நிலையில் வார விடுமுறையை ஒட்டி இன்று (பிப்.12) ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, பைன் ஃபாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இவர்கள் மலை ரயிலில் பயணிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டினர். குறிப்பாக, சூட்டிங் மட்டம் பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளையும், மலை முகடுகளையும், புல்வெளிகளையும் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதையும் படிங்க: மதுரை ரயில் நிலையத்தில் 'கருவாடு' விற்பனைக்கு கடை - தெற்கு ரயில்வே ஏற்பாடு