தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-பாஸ் தளத்தில் மாற்றம் வேண்டும்: டாக்ஸி ஓட்டுநர்கள் கோரிக்கை

திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க முடியாததால், இ-பாஸ் இணையதளத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என உதகை வாடகை கார் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

By

Published : Jun 21, 2021, 9:21 PM IST

Updated : Jun 21, 2021, 10:54 PM IST

ooty taxi drvers petition, நீலகிரி  டாக்ஸி ஓட்டுநர்கள்
டாக்ஸி ஓட்டுநர்கள் கோரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெளி மாவட்டம், வெளிமாநிலத்தினர் ஆகியோர் நீலகிரி வருவதற்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான இணையதளத்தில் மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே விண்ணப்பிக்க வழிவகை செய்யபட்டுள்ளது.

திருமணம், இறப்பு உள்ளிட்டவைகளுக்கு சென்று வர விண்ணப்பிக்க அதில் வசதி இல்லை. இதனால் வாடகை கார்களை (டேக்ஸி) இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

டாக்ஸி ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

எனவே, இ-பாஸ் இணையதளத்தில் மாற்றம் செய்ய கோரியும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரியும் உதகை வாடகை கார் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவிடம் மனு அளித்து கோரிக்கைவைத்தனர்.

இதையும் படிங்க: ’நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து’ - நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்

Last Updated : Jun 21, 2021, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details