மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இதமான வானிலையையும், இயற்கையையும் ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று தாவரவியல் பூங்காவில் கோடை விழா துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
உதகை தாவரவியல் பூங்காவில் கோடை விழா துவங்கியது! - the Nilgris
நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்கிய கோடை விழா , சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வருகிறது.

நீலகிரி
உதகையில் துவங்கிய கோடை விழா
ஆண்டுதோறும் கோடை விழாவில் துவங்கும் காய்கறி கண்காட்சி, தேர்தல் நன்னடத்தை விதி காரணமாக இன்று துவங்கியது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், கோடைக் காலத்தில் அதிகபடியான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்காக உதகையின் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமலும், குப்பைகளை போடாமல் தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.