நீலகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 115ஆக உள்ளது. இந்நிலையில், உதகையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
உதகையில் மூத்த வழக்கறிஞர் ஒருவருக்கு கரோனா - ஊட்டி
நீலகிரி: மூத்த வழக்கறிஞர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
![உதகையில் மூத்த வழக்கறிஞர் ஒருவருக்கு கரோனா வழக்கறிஞர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-tn-nil-01-ooty-corona-infection-for-lawyer-photo-tn10025-03072020111955-0307f-1593755395-842.jpg)
வழக்கறிஞர்
இதனையடுத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் உள்ள நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சுகாதாரத் துறையினர் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.