உதகையில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக தென்னிந்திய கிளப் சார்பில் 128ஆவது மற்றும் 129ஆவது தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாய்கள் பங்கேற்றன.
உதகையில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி! - DOG SHOW
நீலகிரி: உதகையில் கோடை சீசனையொட்டி தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தொடங்கியது.
இந்த நாய்கள் கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்டு, டேசன்ட், கோலடன் ரீட்ரீவர், சைபீரியன் ஹஸ்கி, டாபர்மேன், மோர்சாய், லேபர் டாக், கிரேடன், பீகில், ராஜபாளையம் உள்ளிட்ட 56 வகையான 343 நாய்கள் கலந்துகொண்டன. நாய்களின் உடல் அழகு, கீழ்ப்படிதல், பராமரிப்பு, கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டிகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சார்ந்த நாய்களும் கலந்து கொள்கின்றன. போட்டியை கண்காணிக்க வெளிநாட்டை சேர்ந்த நடுவர்களும் வந்துள்ளனர். கண்காட்சியில் கலந்து கொள்ள வந்துள்ள விதவிதமான நாய்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.