தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுமலையில் விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் தொடக்கம் - முதுமலை

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு முந்தைய விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியது.

MUDUMALAI CENSUS

By

Published : May 21, 2019, 5:54 PM IST

Updated : May 21, 2019, 6:24 PM IST

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உள்வட்ட (Core Zone) பகுதிகளில் தாவர உண்ணிகள் மற்றும் ஊன் உண்ணிகள் குறித்த, பருவமழைக்கு முந்தைய கணக்கெடுப்புப் பணிகள் இன்று தொடங்கியது.

புலிகள் காப்பக கள இயக்குனர் கெளசல் உத்தரவின் பேரில் இணை இயக்குனர் சென்பகபிரியா மேற்பார்வையில் மே 26ஆம் தேதி வரை 7 நாட்கள் இந்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகின்றன. களப்பணிகளில் ஈடுபடும் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள பயிற்சி முகாமில் இதற்கான பயிற்சிகள் நேற்று அளிக்கப்பட்டன.

பயிற்சி கணக்கெடுப்பு உபகரணங்களான ஜிபிஎஸ் கருவிகள், ஸ்மார்ட்ஃபோன்கள், ரேஞ்ச் ஃபைண்டர்கள், டேப்புகள், கயிறு உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இவர்கள் 36 குழுக்களாக பிரிந்து வன விலங்குகளை நேரடி கண்காணிப்பு, கால்தடங்கள், எச்சம், மரங்களில் உள்ள நகக்கீறல்கள் உள்ளிட்ட பல்வேறு தடயங்களைக் கொண்டு இந்த கணக்கெடுப்பை செய்கின்றனர். வனப்பகுதிகளில் மழை பெய்து பசுமை திரும்பி உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Last Updated : May 21, 2019, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details