தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் மழையின்றி விவசாயம், மின் உற்பத்தி பாதிப்பு!

உதகை: நீலகிரி மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் 12 அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவருகிறது. இதனால் நீர்மின் உற்பத்தி, மலை காய்கறி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி

By

Published : Jul 21, 2019, 2:58 PM IST

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். தொடர்ந்து ஒரு மாதம் கனமழை பெய்தால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி கடல் போல காட்சி அளிக்கும்.

இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவருகிறது. குறிப்பாக நேற்றும், இன்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

ஆனால், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சில இடங்களில் மட்டுமே சாரல் அடித்துள்ளது. பருவமழை மட்டுமின்றி, காற்றழுத்த தாழ்வுநிலை காலத்திலும் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யாததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து குளம் போல காட்சி அளிக்கத் தொடங்கியுள்ளன.

உதகை

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் பெரிய அணைகளான அவலாஞ்சி, எமரால்டு, முக்குருத்தி, பைக்காரா உள்ளிட்ட 12 அணைகளின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது.

இதனால் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழை இல்லாததால் மலை காய்கறி சாகுபடியும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details