நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மசினகுடி பகுதி, முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியை ஒட்டியுள்ளது. இதனால் முதுமலையை சுற்றிப் பார்க்கவரும் சுற்றுலாப் பயணிகள் மசினகுடி பகுதியிலுள்ள தனியார் விடுதிகளில் ஓய்வெடுப்பார்கள்.
இந்த விடுதிகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் இருந்தனர். இந்த நிலையில் கடந்தாண்டு யானை வழித்தடம் பிரச்னை காரணமாக 38 தனியார் விடுதிகள் மூடப்பட்டன. இதனால் தனியார் விடுதிகளை நம்பியிருந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வேலைவாய்ப்புயின்றி தவித்துவரும் அம்மக்கள் பயன்பெறும் விதமாக மசினகுடியில் உள்ள குரும்பர்பாடி, மரவகண்டி ஆகிய ஏரிகளில் படகு சவாரி தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.