தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துர்நாற்றம் வீசிய உதகை மார்க்கெட்; வியாபாரிகளை எச்சரித்த ஆட்சியர்! - COLLECTOR INSPECTION

நீலகிரி: சுகாதாரமற்று கிடந்த உதகை நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் கடைகளை சுத்தம் செய்த பின்பு திறக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்

By

Published : Jun 7, 2019, 4:44 PM IST

உதகை நகராட்சிகுட்பட்ட மார்கெட்டில் 500ற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில தினங்களாக மார்கெட் முழுவதும் சுகாதாரமற்று இருந்துள்ளது. குறிப்பாக அழுகிய காய்கறிகள், மாமிச கழிவுகள் என மார்கெட் முன்புறம், சாலையோரங்கள் வீசப்பட்டு குவியலாக கிடந்துள்ளது. இதனால் எழும் துர்நாற்றத்தால், மார்கெட்டிற்கு வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் பாதிப்படைந்தனர். குறிப்பாக மாமிச கழிவுகள் துற்நாற்றத்தால் அப்பகுதிகளுக்கு வருபவர்களுக்கு நோய் தொற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று மார்கெட்டில் உள்ள இறைச்சி கடைகளை ஆய்வு செய்தார். இறைச்சி கடைகள் அனைத்தும் சுகாதாரமற்று இருந்ததை கண்டறிந்தார். மேலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அனைத்தும் சுகாதாரமற்று இருப்பதாகவும், உடனே கடை உரிமையாளர்கள் அவர்களின் கடைகளை சுத்தம் செய்த பின்பு கடைகளை திறக்க வேண்டும் என்று எச்சரித்தார்.

கடை உரிமையாளருக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மேலும், இனி வரும் நாட்களில் அனைத்து வியாழன் கிழமைகளில் 2மணிநேரம் தூய்மை பணியில் கடை உரிமையாளர்கள் ஈடுபட வேண்டும். இதனை பின்பற்றாத கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details