தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 44 ஆண்டுகள் சிறை! - sexual assault case

சென்னை: 2017ஆம் ஆண்டு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ooty mahila court
உதகை மகளிர் நீதிமன்றம்

By

Published : Jan 27, 2021, 4:46 PM IST

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டனி வினோத் என்ற இளைஞர், 12ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் அவர் மாணவியை மிரட்டியுள்ளார்.

அந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் மாணவி துணிச்சலாக தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதன் விசாரணை உதகையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அருணாச்சலம் இன்று (ஜன.27) தீர்ப்பளித்தார். அப்போது, குற்றவாளி வினோத் ஆண்டனிக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

இதையும் படிங்க:சீர்காழி நகை கொள்ளை: என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details