நீலகிரி : உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளம், மண்சரிவு, மரங்கள் வேரோடு விழுவது, மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு போன்ற இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் உதகை அருகே எமரால்டு லாரன்ஸ் என்ற இடத்தில், சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கேரட் தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் நான்கு லட்சம் மதிப்பிலான கேரட் பயிர்கள் தாழ்வான பகுதிக்கு அடித்து செல்லப்பட்டன.