தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞர்கள் உயிரிப்பு: கல்லட்டி அருவிக்குச் செல்ல தடை

நீலகிரி: கல்லட்டி அருவியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ooty-kalhatti-falls-restricted-for-tourists-after-2-youngsters-died-by-drowning
2 இளைஞர்கள் உயிரிப்பு.. கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு தடை!

By

Published : Jan 28, 2020, 5:20 PM IST


நீலகிரி மாவட்டம் அருகே கல்லட்டி அருவியைக் காண கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உதகையிலிருந்து இளைஞர்கள் ஏழு பேர் சென்றுள்ளனர்.

அதில் கணேசன், சாமுவேல் என்ற இரண்டு பேர் அருவியில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களது உடல்கள் தண்ணீருக்கு அடியில் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டது. இதனால் அவர்களின் உடல்களைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டுவந்தனர். ஆனால் உடல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து அரக்கோணத்திலிருந்து மாநில பேரிடர் மீட்புப் படையினரும், தமிழ்நாடு தீயணைப்புத் துறையைச் சார்ந்த ஸ்கூப்பா டைவிங் வீரர்களும் வரவழைக்கபட்டனர். அவர்கள் இன்று காலை உடல்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது தீயணைப்புத் துறை வீரர்கள் உயிரிழந்த கணேசன், சாமுவேல் ஆகியோரது உடல்களைக் கண்டுபிடித்து மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் உடனடியாக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதகை கோட்டாட்சியர் சுரேஷ், 'இனிவரும் காலங்களில் கல்லட்டி அருவிக்குச் செல்லசுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்குத் தடைவிதிக்கப்படும் சுற்றுலாத் தலம் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு அருவிக்குச் செல்லும் சாலையில் சோதனைச்சாவடி அமைக்கப்படும்' எனக் கூறினார்.

2 இளைஞர்கள் உயிரிழப்பு: கல்லட்டி அருவிக்குச் செல்ல தடை

இதையும் படியுங்க: கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க 2ஆம் நாளாகத் தடை!

ABOUT THE AUTHOR

...view details