தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிகிச்சையால் தேறிவரும் சிறுத்தை - நீலகிரி வனத்துறை

நீலகிரி: உதகை தாவரவியல் பூங்கா அருகே காயத்துடன் பிடிபட்ட சிறுத்தை 13 நாள் தொடர் சிகிச்சைக்கு பின் உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர் கூறியுள்ளார்.

panther
Ooty injured panther

By

Published : May 28, 2020, 1:54 PM IST

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் கடந்த 16ஆம் தேதி அன்று காயங்களுடன் சிறுத்தையை கண்ட பூங்கா பணியாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி மற்றும் வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த சிறுத்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தையை வனத்துறையினர் பாதுகாப்புடன் பிடித்து மருத்துவ சிகிச்சைகாக உதகை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். கடந்த 13 நாள்களாக சிறுத்தைக்கு கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் வெடியப்பன் தலைமையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஆரம்ப நாள்களில் சோர்வாக இருந்த சிறுத்தை தற்போது உடல்நிலை தேறி வருகிறது. சிறுத்தைக்கு தலை, வாய், இடப்புற பின்னங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

வெடியப்பன் - கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர்

சிறுத்தை வேறு விலங்கோடு சண்டையிட்டோ அல்லது ஏதாவது மீது மோதியதால் காயமடைந்திருக்கலாம். மயங்கிய நிலையில் உணவு, தண்ணீர் உட்கொள்ள முடியாமல் சோர்வாக இருந்த சிறுத்தை கடந்த இரு நாள்களாக தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்கிறது. அதன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது விரைவில் குணமடையும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பலத்தக் காற்றால் இடிந்து விழுந்த கோழிப்பண்ணை கட்டடம்!

ABOUT THE AUTHOR

...view details